வெள்ளி 17, செப்டம்பர் 2021  
img
img

ஏமாற்றாதே...ஏமாறாதே...என திமுக எம்.எல்.ஏவை நோக்கி பாடும் உடன்பிறப்புகள்!!
சனி 07 ஜூலை 2018 15:56:40

img

வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்று மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை நியமித்து நிர்வாகம் செய்கிறது திமுக தலைமை. அதில் மத்திய மாவட்ட செயலாளரக இருப்பவர் நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்ற இரண்டு மாவட்டங்களில் அதிகளவு கோஷ்டி பிரச்சனை உள்ள மாவட்ட மாக இருப்பது இந்த மத்திய மாவட்டம்தான். தற்போது அந்த மாவட்ட செயலாளர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி ஏமாற்றாதே.. ஏமாறாதே.. என பாட்டுப்பாடி வருகின்றனர்.

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு மலை கிராமங்களை சேர்ந்த பழங்குடி மக்களின் பெண் பிள்ளைகள், படிக்க வசதியில்லாமல் தொடக்க கல்வியையே பாதியில் விட்டுவிட்டனர். அப்படிப்பட்ட பிள்ளைகளை அதிகாரிகள் அழைத்துவந்து அணைக்கட்டுவில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்த்துள்ளனர். இங்கு 55 பெண் பிள்ளைகள் பயின்றுவருகின்றனர்.

இவர்களை கடந்த ஜீலை 6ந்தேதி சென்னைக்கு தனது சொந்த செலவில் அழைத்து வந்த எம்.எல்.ஏநந்தகுமார், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதியை சுற்றிக்காட்டினார். அதோடு பிர்லா கோளரங்கத்துக்கும் அனுப்பி அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார். அங்கு சில செய்தி யாளர்களை சந்தித்த நந்தகுமார், இந்த மாணவிகள் தார்சாலையே பார்த்திராதவர்கள். தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மலைவாழ் மக்க ளுக்கு உதவி செய்ய சென்றபோது, மெரினா கடற்கரையை பார்க்க வேண்டும்மென்றதால், குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன் எனக்கூறி யுள்ளார்.

இதை பார்த்துவிட்டுதான் ஏமாற்றாதே..ஏமாறாதே.. என பாட்டுப்பாடிக்கொண்டுள்ளார்கள் வேலூர் மத்திய மாவட்ட திமுகவினர் பலர். அவர்களிடம் விசாரித்தபோது, பிள்ளைகளை சுற்றுலா அழைத்து சென்று சுத்திக்காட்டியது நல்ல விஷயம்தான். இதையெல்லாம் தலைவர் கலைஞர் பிறந்தநாளுக்காக செய்தேன் என சொல்லி மக்களை ஏமாற்றுவதைத்தான் பொருத்துகொள்ள  முடியலைங்க என்றார்கள்.

என்னவென்று கேட்டபோது, ஜீன் 27ந்தேதி நந்தகுமார் பிறந்தநாள். இதற்காக கோயிலில் பூஜைகள், தங்கத்தேர் இழுப்பு, அன்னதானம் என அவரது ஆதர வாளர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அசத்தி கொண்டாடினார்கள். அப்படியொரு நிகழ்ச்சிக்காக தான் அணைக்கட்டு உண்டு உறைவிடப்பள்ளிக்கு சென்று அங்குள்ள பெண் குழந்தைகளுக்கு இலவசமாக ஆடைகளை வழங்கினார். இந்த ஆடைகளை தனது நண்பர்கள் லண்டன் பைசல், சண்மு கசுந்தரபாபு, துபாய் குமரன், சந்தோஷ் சேர்ந்து உங்களுக்கு இந்த ஆடைகளை வாங்கித்தருகிறார்கள் என்றவர். நான் உங்களை பீச்க்கு அழைத்து செல்கிறேன் என்றார். 

அனைத்தும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு செய்தார், பேசவும் செய்தார். அதுக்கான வீடியோ பதிவுயிருக்கு. ஆனால் முரசொலி பத்திரிக்கை யில் என்னன்னு செய்திவருது, நான் தலைவர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு உடைகள் வழங்கினேன் என்று செய்தி வந்தது. இப்போ பிள்ளைகளை சுற்றுலா அழைத்து சென்றவர் தலைவருக்காக செய்தேன், தளபதிக்காக செய்தேன் என்று சொல்கிறார். பிள்ளைங்களுக்கு துணி தருவது, சுற்றுலா கூட்டிச்செல்வது நல்ல விஷயம்தான், ஆனால் ஏன் தலைவருக்காக செய்தேன் என்று பொய் சொல்லி ஏமாற்றனும் எனக்கேட்கிறார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img