img
img

விவசாய சேலஞ்ச்!!! -கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆர்வம்...
வியாழன் 05 ஜூலை 2018 15:52:16

img

கோவாவில் ஊராட்சித்தலைவரின் சவாலை ஏற்று விவசாய பணிகளை அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். 

கோவாவில் உள்ள அக்வேவ் பைக்சோம் என்ற கிராமத்தின் ஊராட்சித் தலைவர் சித்தேஷ் பகத். இவர், தன்னு டைய விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற புகைப்படத்தை எடுத்து அதை பேஸ்புக்கில் பதி வேற்றினார். அந்த பதிவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோவா சட்டமன்ற உறுப்பினர் அலெக்சியா ரெஜி னால்டோவுக்கு டேக் செய்து, நீங்களும் விவசாய பணிகளில் ஈடுபட்டு அதை புகைப்படம் எடுத்து பதிவிடுங்கள் என்று சவால்விட்டார்.     

இச்சவாலை ஏற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ரெஜினால்டோ, விவசாய நிலத்தில் இறங்கி களை எடுக்கும் பணிகளை செய்து அதை பேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும் அதில் சில அரசியல்வாதிகளை டேக் செய்தார். டேக் செய்தவர்களும் தற்போது விவசாய பணிகளை செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

கோவா வருவாய் துறை அமைச்சர் ரோஹன் கவுந்தே, வேளாண் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் விவசாயப் பணிகளை செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கோவா அரசியல்வாதிகளின் இந்த செயல்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img