புதன் 16, அக்டோபர் 2024  
img
img

குடும்பங்களை பிரிக்கும் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு
திங்கள் 18 ஜூன் 2018 11:48:07

img
வாஷிங்டன்,
 
அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும் கிடையாது என டிரம்ப் நகர்ந்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றை டொனால்டு டிரம்ப் அரசு முன்னெடுத்து வருகிறது.
 
அதாவது சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கடந்த 6 வார காலங்களில் மட்டும் இதுபோன்று 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. அடைக்கலம் கோரி அமெரிக்கா விற்குள் நுழைபவர்கள் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்ப டுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது எதிர்பார்க்காத ஒரு கொள்கை முடிவு என சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் குழுக்கள் விமர்சனம் செய்துள்ளன.
 
இந்நிலையில் டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியாவும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். “குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுவதை பார்க்க வெறுக்கிறேன், ஒரு வெற்றிகரமான குடியேற்ற சீர்திருத்தத்தை விரும்புகிறேன்,” என மெலானியா கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் முதல் குடிமகளான லாரா புஷ், குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரிப்பது ஒழுக்கமற்றது என விமர்சனம் செய்துள்ளார். 
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img