புதன் 11, செப்டம்பர் 2024  
img
img

சுவிஸ் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து
வியாழன் 29 செப்டம்பர் 2016 16:15:58

img

சுவிற்சலாந்தின் அல்ப்ஸ் மலைத் தொடரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியில், இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றமொருவர் காயமடைந்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள செய்தியில், சுவிற்சலாந்தில் இத்தாலிய மொழி பேசும் மக்கள் வாழும் டிசினோ கான்டன் பகுதியிலேயே குறித்த இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்திற்குள்ளாகியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கான்டன் பிராந்திய பொலிஸார் விபத்து தொடர்பில் கருத்து வெளியிடுகையில், விபத்தில் உயிரிழந்த இரு விமானிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டனர். குறித்த விபத்து தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், பிரான்ஸினால் தயாரிக்கப்பட்ட சுப்பர் பூமா ரக ஹெலிக்கொப்டரே விபத்திற்குள்ளாகியதாகவும், குறித்த ஹெலிக்கொப்டரில் இரண்டு விமானிகள் மற்றும் 18 பயணிகள் பயணிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கான்டன் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img