புதன் 16, அக்டோபர் 2024  
img
img

தொடர்ந்து பதவியில் இருப்பேன்..!' - ராணுவப் புரட்சியை மறுதலிக்கும் ஜிம்பாப்வே அதிபர்
புதன் 22 நவம்பர் 2017 13:32:25

img

ஜிம்பாப்வேயில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, அதன் விளைவாக அந்நாட்டின் அதிபர் ராபர்ட் முகபே ,வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று தொலைக்காட்சி  வழி உரையாற்றிய முகபே, `நான் தொடர்ந்து பதவியில் நீடிப்பேன்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த ஜிம்பாப்வேயின் விடுதலைக்காகப் பாடுபட்டவர், ராபர்ட் முகபே (Robert Mugabe). ஜிம்பாப்வேயின் முந்தைய பெயர், ரெகோத்சியா. வடக்கு ரெகோத்சியா, தெற்கு ரெகோத்சியா என இரண்டு பிரிவாக இருந்தது. தெற்கு ரெகோத்சியாவை பிரிட்டிஷ் ஆண்டது. சிறுபான்மையினராக இருந்த ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்தனர்.

பெரும்பான்மைக் கறுப்பர்கள் இருக்கும் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை அகற்றும் போராட்டங்கள், 1960-களில் தீவிரம் அடைந்தன. ஆங்கிலேய அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதால், தேசத்துரோக வழக்கில் முகபே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை ஆனதும், வெளி நாட்டில் தலைமறைவாக இருந்த முகபே, `ஜிம்பாப்பே ஆப்பிரிக்க தேசிய யூனியன்' என்ற கட்சியைத் தொடங்கி, அதன் தலைவரானார்.

அதைத் தொடர்ந்து 1987-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில், முகபே ஜிம்பாப்வேயின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றுவரை அவரே அதிபராக நீடித்து வருகிறார். ஜிம்பாப்வே இப்போது, பெரும் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. இந்தச் சூழலில், அந்நாட்டின் ராணுவம் முகபே-வுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு, அவரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

இதுகுறித்து முகபே, `கட்சி நடைமுறைகள் சில உள்ளன. அது முடிந்த பிறகு மீண்டும் அதிபராகத் தொடர்வேன். ராணுவம், மேற்கொண்டுள்ள நட வடிக்கையில் சாதக பாதகங்கள் இருந்தாலும், அவர்களின் எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன். நாம் இப்போதிருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும்' என்று கூறி, ஜிம்பாப்வே மக்களிடம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அதிபர் பதவி விலகிவிடுவார் என்று பெரும்பான்மை ஜிம்பாப்வே குடிமக்கள் நினைத்திருந்த நிலையில், இப்படியொரு கருத்தை முகபே கூறியுள்ளார். 

கடந்த 15-ம் தேதி, ஜிம்பாப்பே தலைநகர் HARARE-வில் உள்ள அதிபரின் வீட்டுக்குள் நுழைந்த ராணுவம், முகபேவை வீட்டுச் சிறையில் வைப்பதாக அறிவித்தது. எனினும், ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், 'அதிபர் முகபே எங்களது இலக்கு அல்ல. அவரைச் சுற்றி இருக்கும் குற்றவாளிகளைக் களையெடுக்கவே இந்தப் புரட்சியில் ஈடுபட்டோம்' என்று சொல்லியிருந்தது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img