img
img

விழித்திரு விமர்சனம்
திங்கள் 06 நவம்பர் 2017 15:51:51

img
 
நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களை ஒன்றாக கலைக்கி வைத்திருக்கும் பழரசப்பானை. இதில் விதார்த் திருடனாக வருகிறார். ஒரு வீட்டுக்கு திருட செல்லும்போது அங்கு ஏறகனேவ திருட வந்த தன்ஷிகாவை மனைவி என்று கூறி தம்பிராமைய்யா கட்டிபோட்டு வைத்திருக்கிறார். இரண்டு திருடர்களும் பணம் நகைகளை திருடிக்கொண்டு வெளியேறி பணத்தை எப்படி அபகரிப்பது என்ற எண்ணத்தில் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். 
 
அடுத்து வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா தனது பணப்பையை தொலைத்துவிட்டு தற்காலிகமாக தனது நண்பன் வேலைபார்க்கும் வாடகை கார் ஓட்டும் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். எஸ்.பி.சரணை வாடகைக்காரில் ஏற்றிக் கொண்டு ஒரு அமைச்சரின் விருந்தினர் விடுதிக்கு செல்கிறார். அங்கு அமைச்சர் பற்றிய ரகசியங்களை வெளியிடக்கூடாது என்று பத்திரிகைக்காரரான சரணிடம் அமைச்சருக்கு வேண்டிய நபர்கள்  மிரட்டுகிறார்கள். அதற்கு சரண் மறுக்கவே அவரை கொலை செய்துவிடுகிறார்கள். குற்றுயிராக இருக்கும் சரண் தான் வந்த வாடகைக்காரில் ஏறியதும் கிருஷ்ணா வேகமாக காரை ஓட்டி கொலைகாரர்களிடமிருந்து தப்பிக்கிறார். கிருஷ்ணாவை கொலைகாரர்கள் தேடி அலைகிறார்கள்.
பிணத்துடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்கிறார் கிருஷ்ணா. ஆனால் அந்த போலீஸ் அதிகாரியும் அமைச்சருக்கு வேண்டியவாரக இருப்பதால் கொலைப்பழியை கிருஷ்ணா மீது சுமத்திவிட்டு சரண் வைத்திருந்த அமைச்சரின் ரகசியங்கள் அடங்கிய ஐபேடை கிருஷ்ணாவிடம் கேட்கிறார்கள் போலீஸ்காரர்கள். அது தனக்கு தெரியாது என்று கூறிவிட்டு போலீஸ்காரர்களிடமிருந்து தப்பிக்கிறார் கிருஷ்ணா. அமைச்சரின் அமைச்சரின் ரகசியங்கள் அடங்கிய ஐபேடை காரில் இருந்து எடுத்துக் கொண்டு கொலைகாரர்களிடிருந்து தப்பித்துக் கொண்டே வருகிறார் கிருஷ்ணா.
 
அடுத்த கதாபாத்திரம் கண் தெரியாத வெங்கட்பிரபு தனது குழந்தையுடன் தொலைந்துபோன நாய்குட்டியை தேடி அலைகிறார். குழந்தை தனியாக நாய்குட்டியை தேடிச் செல்லும்போது சமூகவிரோதிகளிடம் சிக்கி தப்பித்து அலைகிறது.
 
அடுத்த கதாபாத்திரமாக வருகிறார் ராகுல் பாஸ்கரன். பெரிய கோடீஸ்வரரான இவர் ஒரு பெண்ணை அனுபவிக்க அப்பெண்ணுடன் சென்னைக்கு வருகிறார். சாலையில் படுத்துறங்கும் ஏழையின் கடையில் கார்மோதி மண் மொம்மைகள் எல்லாம் உடைகிறது. அவருக்குப் பணத்தை கொடுத்துவிட்டு செல்லும்போது தனது பர்சை தொலைத்துவிடுகிறார். போன் செய்து தனது மானேஜரை அழைக்க வேண்டும் என்றால் போனில் சார்ஜ் இல்லாமல் போய்விடுகிறது. இவரும் கையில் பணம் ஏதும் இல்லாமல் அந்த பெண்ணுடன் பயணிக்கிறார்.
 
இந்த நான்கு கதாபாத்திரங்களும் எப்படி ஒன்றாக இணைகிறது என்பதை வெள்ளித்திரை வெளிப்படுத்துகிறார் இயக்குநர்.
 
கிருஷ்ணா தனது பரபரப்பு நடிப்பை அப்படியே வெளிபடுத்திருக்கிறார். ஆச்சரியக்குறியும் பரபரப்பும் அவர் முகத்தில் படம் முழுக்க வெளிப்படுகிறது. சண்டைக்காட்சிகளில் இயல்பான சண்டையை அப்படியே போடுவது கிருஷ்ணா விரும்பியே அதை செய்திருக்கிறார் போல் தோன்றுகிறது. திருடனாக வரும் விதார்த் அமைதியான நடிப்பால் அசத்துகிறார். இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பு அவருக்கு தேவை. இப்படத்தில் தன்ஷிகாவின் நடிப்பு அலாதியானது. மனுஷி விறுவிறுப்புக் குறையாமல் வெளுத்து வாங்குகிறார். திருடிக்கியுள்ள குணாதிசயத்தை சிரிப்பிலும் கண் அசைவிலும் கச்சிதமாக காட்டுகிறார். 
 
ஒரு குத்தாட்டம் போடுவதற்காக டி.ஆர்.நடித்திருக்க வேண்டாம். 
 
குருடன் எப்படி நடப்பானோ அப்படியே நடந்து நடித்து காட்டுகிறார் வெங்கட்பிரபு. அவரது அமைதியான பேச்சு ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. தம்பிராமைய்யாவின் தனிநடிப்பு வெளிப்படுகிறது. விழித்திரு படம் பார்க்கும் அனைவரையும் விழித்திருக்கிற செய்கிறது சலிப்பு தட்டாமல்.
 
பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img