செவ்வாய் 07, டிசம்பர் 2021  
img
img

பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை
திங்கள் 19 செப்டம்பர் 2016 13:12:48

img

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அவர் யுத்தத்தில் மரணமடைந்து விட்டார் என்று பலவகையான சான்றுகளை நிறுவி இலங்கை அரசு பிரபாகரன் மரணமடைந்து விட்டார் என்று அடித்து கூறுகின்றது. அதே சமயம் புத்தகங்கள் வெளியிட்டும் இதனை உறுதிப்படுத்த முனைகின்றது. யுத்த நிறைவுக்கு பின்னர் தற்போதே இது அன்றாடம் வலியுறுத்தப்பட்டு கொண்டு வருகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் இறந்தபோது அவரின் நினைவுப் பொருளாக அவருடைய அடையாள அட்டையை எடுத்து வைத்திருப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அண்மையில் தெரிவித்துள்ளார். இங்கு இலங்கை இராணுவத்தால் தீவிரவாதிகளின் தலைவராக கருதப்பட்ட ஒருவருடைய அடையாள அட்டை தனிநபர் ஒருவருக்கு சொந்தமாக்கப்பட்டது எவ்வாறு என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதே சமயம் இத்தனை வருடங்கள் கழித்து அவருடைய மரணம் தொடர்பில் சான்றுகளை தற்போது வலுக்கட்டாயமாக முன்வைப்பது ஏன்? இதற்கு பின்னணியாக இருப்பவர் யார்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் பல்வேறு வகையாக பிரபாகரனின் மரணம் தொடர்பில் கூறுவதற்கு பதிலாக அவரின் மரணச்சான்றிதழ் ஒன்றினை மட்டும் வெளியிட்டு விட்டால் சந்தேகங்கள் நிவர்த்தியாகிவிடும். அதனை மட்டும் ஏன் அரசு செய்ய மறுக்கின்றது. இதேவேளை, தற்போதைய அரசு பிரபாகரன் மரணம் தொடர்பில் உண்மைகளை மறைக்கின்றது. காரணம் அது வெளிப்படுத்தப்பட்டால் அது மிகப்பெரிய இனக்கலவரம் நாட்டில் ஏற்பட ஏதுவாக அமைந்து விடும் என்பது உண்மையே. அவ்வாறு ஏற்பட்டு விட்டால் இனி ரணில் - மைத்திரிக்கு மட்டுமல்ல மஹிந்தவிற்கும் ஆட்சி பொறுப்பு மற்றும் மக்கள் செல்வாக்கு என்பது எதிர்வரும் காலங்களில் கனவிலும் கிடைக்காது என்பதும் அறியத்தக்கதே. இதேவேளை, போர்க் குற்ற இரசியங்களை வெளியிடும் அளவிற்கு நான் கீழ்த்தரமானவன் அல்ல எனக் கூறிக்கொண்டு வரும் காமால் குணரத்ண ஒவ்வொரு நாளும் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருவதற்கு காரணம் போர்க்குற்றங்களில் இருந்து அவர் தப்ப வேண்டும். அதே சமயம் மக்கள் ஆதரவும் தம் பக்கம் ஈர்த்துக்கொண்டு புதிய திட்டம் ஒன்றினை அவர் வகுப்பதாகவும், ஆனாலும் இவை இவர் மட்டும் தனித்து செய்யும் செயல் அல்ல எனவும் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. மஹிந்த, இராணுவம், பௌத்தம் என மூன்றும் ஒன்றிணைந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்திலேயே தற்போது செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும், அதே சமயம் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லாத வகையில் அவை தற்போதைய ஆட்சியாளர்கள் பக்கம் திசை திருப்பும் செயற்பாடுகளே இவை எனவும் கூறப்படுகின்றது. இதற்கு சான்றாக இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கடந்த கால ஆட்சியில் மஹிந்தவிற்கு ஆதரவாக செயற்பட்ட இராணுவ தளபதிகளும் மஹிந்தவோடு தற்போது இணைக்கப்பட்டு கொண்டு வருவதாகவும் தகவல்கள் உள்ளன. அதே சமயம் கருணாவினது மீழ் பிரவேசம் போன்றவை அமைந்து விடுகின்றன. எவ்வாறாயினும் தற்போது பொறுப்பில் உள்ள ரணில் மைத்திரிக்கு பெரிய தொரு தலையிடி அதி விரைவில் ஏற்படும். இதற்காக சாதூர்யமாக மஹிந்த தரப்பு செயற்படுவதோடு அதற்காக மக்களை உசுப்பேற்றும் செயற்பாடுகளே விடுதலைப்புலிகள் என்ற காரணப்பொருள் எனவும் அரசியல் நோக்குனர்கள் மூலம் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
img
பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை 

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img