செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

பிரபாகரனை மாங்குளம் காட்டுக்குள் பாதுகாப்பாக அழைத்து செல்ல முற்பட்டனர்.
திங்கள் 19 செப்டம்பர் 2016 12:58:20

img

இறுதி யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மாங்குளம் காட்டுக்குள் பாதுகாப்பாக அழைத்து செல்ல முற்பட்டதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். அவ்வாறு பிரபாகரன் தப்பி சென்றிருந்தால் மேலும் ஆறு மாதங்களுக்கு யுத்தம் நீடித்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதி வெளியிட்டுள்ள நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகளை சுமார் 800 சதுர மீற்றருக்குள் சுற்றி வலைத்துக்கொண்டோம். இதனையடுத்து 17ஆம் திகதி அவர்கள் மீதான எமது முதலாவது தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். நந்திக்கடல் வடக்கே இராணுவத்தின் 53ஆவது படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. கிழக்கில், 58ஆவது படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. மேற்காக, களப்பு காணப்பட்டது. இந்நிலையில், 17ஆம் திகதி அதிகாலை நந்திக்கடல் களப்பிலிருந்து படகுகள் பல விரைந்து வந்தன. அவற்றில், ஆறு தற்கொலைத் தாக்குதல் படகுகள் காணப்பட்டன. அவை, எமது படைப்பிரிவு இருக்கும் திசைநோக்கி வந்து வெடித்துச் சிதறின. எனினும், எமது படையினர், அஞ்சவில்லை. படையினரும், எதிர்த் தாக்குதல்களை நடத்தினர். இதுவே, பிரபாகரனைக் காப்பாற்றுவதற்காக, புலிகளால் நடத்தப்பட்ட இறுதித் தாக்குதல். எமது பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு, பிரபாகரனை மாங்குளம் காட்டுக்கு அழைத்துச் செல்லவே, அவர்கள் முயற்சித்தனர். அப்படி நடந்திருந்தால், மேலும் 6 மாதங்களுக்கு, யுத்தம் நீடித்திருக்கும். புலிகள் இயக்கத்தினரால், மாங்குளம் காட்டில் ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விடயத்தை, அதன்பிறகே நாம் உறுதி செய்துகொண்டோம். மக்களோடு மக்களாக, இரவு வேளைகளில் இராணுவப் பகுதிக்குள் நுழைய விடுதலைப் புலிகள் முயற்சி செய்தனர். இரவு வேளைகளில், இராணுவ பிரதேசத்துக்குள் எவரையும் அனுமதிக்க வேண்டாமென நான் உத்தரவிட்டேன். இருப்பினும், சிலர் கலவரப்பட்டதால், இராணுவ அதிகாரியொருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். இதன்போது, மக்கள் மத்தியில் மறைந்திருந்த புலிகள், எம்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். சுமார் 300 மீற்றர் நீளமான எமது பாதுகாப்பு வேலி உடைந்தது. அதனூடாக, புலிகள் வரத் தொடங்கினர். இருப்பினும் நாம், பின்னாலிருந்து தாக்கத் தொடங்கினோம். 18ஆம் திகதி அதிகாலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்ள்ஸ் அன்ரனி, இந்தத் தாக்குதலின் போதே கொல்லப்பட்டார் என அவர் தனது புத்தகத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img