புதன் 11, செப்டம்பர் 2024  
img
img

தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை
வியாழன் 28 செப்டம்பர் 2017 15:04:48

img

தாய்லாந்து நாட்டில் அரிசி மானியத் திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்து நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் யிங்லக் ஷினவத்ரா வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். அப்போது, அரிசி மானியத் திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டம் விவசாயிகளிடையே மிகவும் பிரபலம் ஆனது. ஆனால், இதற்காக அரிசி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

ஊழல் விவகாரங்கள் தொடர்பாக பிரதமருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. 2014ஆம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டதுடன், அவர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதில், அரிசி மானியத் திட்டத்தில் முறைகேடு செய்த தாக தொடரப்பட்ட வழக்கும் ஒன்று. இந்த திட்டத்தினால் அரசுக்கு பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

இவ்வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட் டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என தெரிகிறது. 

இவ்வழக்கில் கடும் தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சம் காரணமாக அவர் நாட்டை விட்டு சென்றுவிட்ட தாக அவரது உதவியாளர்கள் கூறுகின்றனர். அவர் துபாயில் உள்ள சகோதரர் தக்சின் ஷினவத்ரா வீட்டிற்கு சென்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img