செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்
வியாழன் 27 ஜூலை 2017 15:35:10

img

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உச்ச நீதிமன்றத்தால் நேற்று (புதன்கிழமை) இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஹமாஸ் அமைப்பின் மீதான தடை, தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக எவ்வித சாட்சியும் பதிவாக வில்லையென தெரிவித்த நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்த்துக்கொள்ளப்பட்ட முறை தவறென லக்ஸம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஓர் அமைப்பை சர்வதேச சட்டங்களின் மூலம் ஒரு பயங்கரவாத அமைப்பாக வரையறுக்க முடியாதென நீதிமன்றத்தில் வாதாடப்பட்டு வந்தது. இந்நிலையில், புலிகள் அமைப்பை சேர்த்துக்கொண்ட விதத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. எனினும், பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முறைதான் ரத்து செய்யப்பட்டது எனவும், அவ்வமைப்பின் மீதான தடை தொடரும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த காலங்களில் குறிப்பிட்டு வந்தது. அதன்படி,புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடை பட்டியலிலிருந்து நீக்கக் கூடா தென இலங்கையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனை ஒன்றியத்திற்கு அறிவிக்க வேண்டுமென இலங்கை அரசு கடுமையாகப் போராடியது. எனி னும் புலிகள் அமைப்பை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் இடம்பெற்ற ’செப்டம்பர் 112 தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத கறுப்புப் பட்டியல் உருவாக்கப்பட்டது.இதில் 13 தனிநபர்கள் மற்றும் 22 அமைப்புகளின் பெயர்கள் உள்ள டக்கப்பட்டன. கடந்த 2001ஆம் ஆண்டு இப்பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டதோடு, 2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img