புதன் 11, செப்டம்பர் 2024  
img
img

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கவே முடியாது!'
வெள்ளி 30 ஜூன் 2017 16:12:01

img

இன்னும் ஒரு வாரத்தில் ஜி-20 நாடுகளுக்கான மாநாடு நடக்கவுள்ள நிலையில், ஜெர்மனியின் சான்செலர் எஞ்செலா மெர்கெல், 'பாரீஸ் ஒப்பந்தத் திலிருந்து பின்வாங்கவே முடியாது. அதை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவும் முடியாது' என்று கடுகடுத்துள்ளார். 2015-ம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடி வமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) குறிப்பிட்ட அளவு குறைப்பது. அதற்கு ஏற்றாற்போல நாடுகள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்பதுதான் திட்டம். இதற்கு ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு முதலில் ஒப்புக்கொண்டாலும் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, 'அமெரிக்க பொருளாதாரத்தை இந்த ஒப்பந்தம் சீரழித்துவிடும்' என்று கூறி, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதற்கு, உலக நாடுகள் பலவும் தொடர் கண்டனங்களைக் கூறிவந்தாலும், தான் எடுத்த முடிவிலிருந்து ட்ரம்ப் பின் வாங்குவதாக இல்லை. இந்நிலையில், ஜெர்மனியின் சான்செலர் மெர்கெல் அமெரிக்காவுக்கு மறைமுகமாகச் சவால்விடும் தொனியில் பேசியுள்ளார். இந்த விஷயம் குறித்து அவர்,'அமெரிக்கா, பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்ததிலிருந்து, இதில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்று மிக உறுதியோடு இருக்கிறோம். இந்த ஒப்பந்தம், பின்வாங்கக்கூடியதோ பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தக்கூடியதோ அல்ல. எந்த நாடாவது தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வ தால் புவி வெப்பமாதல் பிரச்னையைச் சமாளித்துவிடலாம் என்று நினைத்தால் அவர்கள் மிகப் பெரிய தவறை இழைக்கின்றனர்' என்று சூச கமாகக் கூறியுள் ளார். ஜி-20 மாநாட்டில் அமெரிக்காவும், இந்தியாவும் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img