செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

அமெரிக்காவில் சாதனை படைத்த தமிழ் மாணவன்!
வெள்ளி 30 ஜூன் 2017 15:27:35

img

அமெரிக்காவில் கல்வி கற்று வரும் தமிழ் மாணவனான நிருபன் பகிதரன் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத் துள்ளார். Technology High School Newark உயர்தரக் கல்வியைக் கற்று அதிகப் புள்ளிகளைப் பெற்று, முதல் நிலை மாணவனாக தன்னை பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக பல்கலைக் கழகத்தில் மருத்துவ, பொறியியல் துறைகளில் கல்வி கற்கத் தகைமை பெற்றுள்ளார். Rutgers University புலமைப் பரிசில் வழங்கி, கல்வியைத் தொடர வாய்ப்பளித்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பகிதரன் குருநாதபிள்ளை - கமலேஸ்வரி பகிதரன் ஆகியோரின் புதல்வரான நிருபன் ஜெர்மனியை பிறப்பிடமாக கொண்டுள் ளார். தற்போது அமெரிக்காவின் Newark,New Jersey இல் வசித்து வருகிறார். தனது 7 வயதில் கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண் டமைக்காக நியூயார்க் மேஜர் ஷார்ப் ஜேம்ஸ் சிறப்புப் பரிசு வழங்கி கௌரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளில் திறமை பெற்ற நிருபன், தமிழ் மொழியையும் கற்று வருவதுடன், எமது கலை, கலாச்சார நிகழ்வு களிலும் பங்கு பெற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். கடந்த வருடம் இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்கா நடத்திய கட்டுரைப் போட்டியில் நிருபன் இரண்டாம் இடத்தினை பெற்றதற்காக முன்னாள் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளரும், நீதிபதியுமான நவநீதம்பிள்ளை வெற்றிக் கிண் ணத்தை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img