செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
ஞாயிறு 18 ஜூன் 2017 16:52:42

img

ராமேஷ்வரம், கடந்த 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தடைக் காலம் முடிந்து கடந்த 14-ந் தேதி இரவு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதற்கிடையே இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் கைது செய்வோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் கடற் படையினர் எச்சரித்தனர்.அவர்களது எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கோட்டைபட்டினம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் பாக்ஜலசந்தி பகுதிக்கு செல்வதை தவிர்த்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இருப்பினும் சிலர் வழக்கம்போல் நெடுந்தீவு பகுதிக்கு சென்று மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நள்ளிரவில் கடலில் வலையை விரித்து மீனுக்காக காத்திருந்தனர்.அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள், “இது எங்கள் எல்லை பகுதி. இங்கு மீன்பிடிக்ககூடாது” என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். அப்போது ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் காங் கேசன் துறைமுகம் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் யார் என்ற விவரம் தெரிய வில்லை.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img