img
img

வியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி!
புதன் 14 ஜூன் 2017 13:37:48

img

எந்தவொரு தொழிலையும் தொடங்கும்போது கஷ்டங்கள் ஏற்படுவது மிகவும் இயல்பு. அவற்றை எதிர்கொள்ளும்போதுதான் நம்முடைய தன்னம்பிக்கை வளரும் எனக் கூறுகிறார், பெட்டாலிங் ஜெயா, கிளானா ஜெயாவைச் சேர்ந்த வினோதினி சத்தியமூர்த்தி (32). கணக்கியல் துறையில் தன்னு டைய மேற்கல் வியைத் தொடர்ந்து தற்போது ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தாலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என் பதற்காக கிளானா ஜெயாவில் அழகியல் மையத்தை நடத்தி வருகிறார். அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. ஆனால், அன்றைய காலக் கட்டத்தில் இதற்கு அவ்வள வாகத் தேவை இல்லாத காரணத்தினால் கல்வியைக் கணக்கியலில் மேற்கொண்டு தொடர்ந்துள்ளார். இப்போது அதற்கான தேவை அதிகமாக உயர்ந்துள் ளது. அதே சமயம், இது குறித்து படிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு தனது சிறு வயது ஆர் வத்தையே தற்போது வியாபாரமாக மாற்றி பகுதிநேரமாகச் செய்து வருகிறார் விநோதினி. இதற்கு அவரின் கணவர் முரளிதரனும் பக்கப்பலமாக அமைந்து துணை செய்து வருகிறார்.நமக்கு விருப்பமான துறையில் ஆழ்ந்த ஈடுபாட் டோடு தூரநோக்குச் சிந்தனையையும் பெற்றிருப்பதும் அவசியமாகும். அந்த வகையில்தான், தற்போது தொழிலுக்காக இடத்தையும் அவ்வாறுதான் தேர்ந் தெடுத்தது எனவும் அவர் குறிப்பிடுகிறார். தொழில் தொடங்குவதற்கு முன்பு தேர்ந்தெடுத்த இடத்தில் நமக்குப் போட்டியாக நம்முடைய தொழிலை வேறு யாராவது செய்கிறார்களா, அத்தொழி லுக்கான அங்குள்ள வாடிக்கையாளர் வட்டம் போன்றவற்றை நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார். தற்போது சிறிய அள வில் ஒப்பனை மையத்தைத் திறந்திருந்தாலும் வருங்காலத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அழகியல் ஒப்பனை மையத்தைத் திறக்க வேண் டும் என்பதுதான் விநோதினியின் நீண்ட கால திட்டமாகும். நிறைவேற நமது வாழ்த்துகள்!

பின்செல்

மகளிர்

img
சாதனைப் பெண் வைஷ்ணவிக்குப் பின்னால் இத்தனை துயரங்களா?

உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”

மேலும்
img
பெண்களே! உங்கள் முடிவு உங்கள் தலைவிதியை மாற்றும். : சாதனைப் பெண் ஜெயலதா

ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்

மேலும்
img
சிவராத்திரியை முன்னிட்டு,10,000 நடனக் கலைஞர்கள் ஒன்றாக பங்கேற்று கின்னஸ் சாதனை

உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த

மேலும்
img
நெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி

குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்

மேலும்
img
வியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி!

அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img