திங்கள் 18, அக்டோபர் 2021  
img
img

சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017
திங்கள் 17 ஏப்ரல் 2017 14:31:26

img

ரிஷபம்: நிதானமாக செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும்: தோற்றத்தில் எளியவராகவும், பழகுவதற்கு இனிய வராகவும், மனதில் எப்போதும் நிறைவானவரா கவும், மற்றவர்களைப் போற்றி மதித்து பேசுபவராகவும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை இல்லாமல் தேடுதல் உள்ளவராகவும், தெய்வம் தன் னுள் இருப்பதை உணர்ந்தவராகவும், மற்றவர்களிடம் பேசும்போது அறிவுப்பூர்வமாக விளக்கி புரிய வைக்கக் கூடியவராகவும் வாழ வேண்டும் என்று தனக்குத் தானே ஓர் வழியை, கொள்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் நீங்கள் செய்யும் தொழிலில்கூட மனமறிந்து மற்றவர்கள் பணத்தை எடுக்க மாட்டீர்கள். என்னதான் பட்டப்படிப்பு படித்து வேலை செய்து வந்தாலும் சொந்தமாக ஒரு தொழில் செய்ய வேண்டும், ஒரு வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். நன்றாக உழைக்கத் தெரிந்த உங்களுக்கு உங்களுக்கான மரியாதை, மதிப்பை குடும்பத்தினர் மட்டும் கொடுக்கவே மாட்டார்கள். என்னதான் மனைவியை அல்லது கணவரை வெறுப்பு, கோபமாக பேசினாலும் மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்துக்கூட பேச விரும்ப மாட்டீர்கள். பாசத்தை வெளிப்படையாக காட்டத் தெரியாத குழந்தை உள்ளம் படைத்த ராசியில் பிறந்தவரே! இன்றுவரை என்னதான் நடந்து வருகிறது?: கடந்த இரண்டு வருடங்களாகவே கண்டக சனியின் காலத்தில் இருந்து வருகிறீர்கள். ஒரு சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவிக்குள் பிரச்சினை. ஒரு சிலரின் கணவருக்கு பிரச்சினை. ஒரு சிலரின் மனைவிக்கு கஷ்டம், பிரச்சினை. ஒரு சிலருக்கு நண்பர்களால், தோழிகளால் பிரச்சினை. ஒரு சிலரின் தெய்வீக்காதலில் பிரச்சினை. பிரிவு ஏன், எப்படி இப்படிக்கூட நமது இருவருக்கும் இடையே இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையே என்ற அளவுக்கு காரணமே தெரியாத புரியாத நிலை என்றும், ஒரு சில ரின் பங்காளிகளுக்குள் பிரச்சினை என்றும் இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம் என்று ஏற்பட்டு, பரவாயில்லை என்று இருந்து வந்த நிலையில் ஒரு சிலருக்கு வீடு, மனையால், தொழிலால், ஒரு சிலருக்கு எதிர்பாராமல் வந்த நோயால் தப்பித்ததே தம்பிரான் புண்ணியம் என்ற நிலையில் இருந்து வருகிறீர்கள். கடந்த எட்டு மாதமாக ஒரு சிலருக்கு மகனால் பிரச்சினை, மகளால் பிரச்சினை என்ற நிலையிலிருந்து இப்போது பரவாயில்லை என்ற அளவில் இருந்து வருகிறீர்கள். உங்களை அறியாமல் கடன் தொல்லையும் எப்படித்தான் இவ்வளவு வந்ததோ என்ற குழப்பத்தாலும் ஒரு சிலர் இருந்து வருகிறீர்கள். 2017 தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் என்னதான் சொல்கிறது?: இந்த வருடத்திற்குள் மிக முக்கிய கிரகங்களான ராகு - கேது, சனீஸ்வரர், குருபகவான் ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதனால் உங்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை கிரகங்கள் நடத்தப் போகின்றன. இந்த மாற்றங்கள் நல்லது செய்யுமா என்று நீங்கள் கேட்டால் ஆம் நல்லதுதான் செய்யப் போகிறது. ஆனால் நீங்கள் அகலக்கால் வைக்காமல், உங்களின் படிப்பு, குணம், பணம், குடும்பத்தின் அளவு தெரிந்து அதற்கான முயற்சிகளை மட்டுமே செய்தீர்கள் என்றால் நல்லபடி யோகங்களை குருபகவானும், சனீஸ்வரனும், ராகு-கேதுவும் உங்களுக்கு கொடுத்தே தீர்வார்கள். ஆனால் உங்களின் மதி என்ற மனதை நடத்துவதே ‘விதி’ என்ற கிரக நிலைதானே. அது உங்களை அகலக்கால் வைத்து உடனடியாக தானே தேடி வருகின்ற வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆசை உங்களுக்கு வந்தே தீரும். அந்த சூழ்நிலைக்கு கட்டுப்பட்டே நீங்கள் அகலக்கால் வைக்கும்படியான சூழ்நிலைகளை வரும் 12.9.2018க்குப் பிறகு 6ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகும் குருபகவான் உங்களுக்கு கடனை உயர்த்துவதற்காக உதவிகள் செய்வார். இதுவரை நீங்கள் போய் கேட்ட லோன், கடன் பணமெல்லாம் செப்டம்பர் 12ஆம் தேதிக்குப்பிறகு சாதகமான அழைப்புகள் உங்களுக்கு வரப்போகிறது. தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சனீஸ்வரரும் ராகு - கேதுவும் என்ன பலன்களை கொடுக்கப் போகிறார்கள்?: வரும் 27.10.2017ஆம் தேதிக்குப் பிறகு அஷ்டம சனியின் பிடிக்குள் வர விருக்கிறீர்கள். இது மற்ற ராசிக்காரர்களுக்கு மிகவும் கெட்ட பலன்களை கொடுக்கும். ஆனால் சனீஸ்வரர் உங்களின் ராசிக்கு, பாக்கியஸ்தானத்திற்கும் தொழில் ஸ்தானம் ஆன ஜீவ ஸ்தானத்திற்கும் ஆதிபத்யமாவார். இதனால் உங்களின் ராசிக்கு யோகக்காரரும் சனீஸ்வரர்தான். இதனால் உங்களுக்கு மோசமான பலன்களை கொடுக்க மாட்டார். ஆனால் பலன்களை நீங்கள் அதிக முயற்சிகள் செய்தால் கொடுத்தே தீருவார். சனீஸ்வரருக்கு 3-7-10ஆம் பார்வைகள் உண்டு. அஷ்டம ஸ்தானமான 8ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகும் சனீஸ்வரர் தனது 3ஆம் பார்வையால் தொழில் ஸ்தானமான 10ஆம் இடத்தை பார்ப்பதால் தற்போது செய்துவரும் தொழிலுடன், வியாபாரத்துடன், உத்தியோகத்துடன் மேலும் ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ, உத்தியோகத்தையோ செய்யும் வாய்ப்பு, சூழ்நிலைகள் அல்லது செய்துவரும் தொழிலிலோ, வியாபாரத்திலோ, உத்தியோகத்திலோ உயர்வுகள் நல்ல மாற்றங்கள், வாய்ப்புகள் வரும். 27.10.2017 முதல் 21.2.2018க்குள் நடந்தே தீரப்போகிறது. கணவன் - மனைவி பிரச்சினை தீருவதற்கான காலம்: கணவன்-மனைவியிடையே பிரச்சினை, பிரிவினை என்று வாழ்ந்து வருபவர்கள் இணைந்து வாழ்வதற்கான கால சூழ்நிலை இயல்பாகவே அமையும் என்றாலும் இதற்கான முயற்சிகளை இரு வீட்டுப் பெரியவர்களும் தங்களது வீட்டு பெருமை களைப் பற்றி சிறிதுகூட நினைத்துப் பார்க்காமல் தம்பதிகளை இணைத்து வாழ வைப்பது என்று முடிவு செய்து இதற்கான முயற்சிகளை செய்தால், மீண்டும் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியான தாம்பத்தியம் வந்தே தீரும். சொந்தங்களுக்குள் ஏற்பட்டு விட்ட பகைகள், உடல் ஆரோக்கியக் குறைவால் ஏற்பட்டு விட்ட இயலாமை, தொழிலாளர்களால் ஏற்பட்டு விட்ட தொல் லைகள், மகன் - மகளாள் ஏற்பட்டு விட்ட மன வேதனைகள், அவமானங்கள், சம்பந்தமே இல்லாமல் தன்னையும் ஈடுபடுத்தி வந்த கோர்ட் வழக்குகள், மனை வாங்கி வீடு கட்டி குடியேற நினைத்துக் கட்டிய வீடு பாதியிலேயே இருந்துவிட்ட அவமான சூழ்நிலைகள், வெளியூர், வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்க நினைத்து, பணத்தை இழந்து பரிதவிக்கும் நிலை. இவை அனைத்திற்கும் படிப்படியாக நல்ல நிலைகளும் நல்ல பலன்களும் நடக்க ஆரம்பிக்கும். துணிந்து நில்லுங்கள். வெற்றி பெறுவீர்கள். துன்பம் எப் போதும் நிரந்தரம் அல்ல. இதையும் கடந்து வாழ்வோம் வளர்வோம் என்ற நம்பிக்கை உங்களுக்குள் வர வேண்டும். சக ஊழியரிடம் குறைகளைப் பேசாதீர்கள்: பணம் பல வழிகளிலும் வந்து சேரும். யோகமான தசை ஆரம்பிப்பது போன்ற பிரமை உருவாகும். இதைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். ஏனென்றால் அடுத்தடுத்து உங்களுக்கு உள்ள கஷ்டத்தை கொடுப்பதற்காகத்தான் பணவசதியை கிரகங்கள் தற்போதைய காலங்களில் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதனால், தற்போதைய தேவை, வருங்காலத்தில் வரப்போகும் மாத வருமானத்தை சிந்தித்து கடன் வாங் குங்கள். இல்லையென்றால் மாட்டிக் கொள்வீர்கள். தாமதமாகி வரும் மகன் அல்லது மகள் திருமணத்தை முடித்து சந்தோசம் அடைவீர்கள். சிலருக்கு இழுத்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும் கோர்ட் கேஸ் வழக்குகளில் நல்ல தீர்ப்பு நாடி வரும். சக ஊழியர்களிடம் உள்ள குறைகளை மற்றவர்களிடம் விலாவாரியாகப் பேசாமல் இருப்பது மேன்மை தரும்: இது தற்போது வாகனத்தில் சஞ் சரித்து வரும் கோள்சாரப் பலன்கள் மட்டுமே. உங்களின் பிறந்தகால ஜாதகத்தில் இப்போது நடந்து வரும் தசாபுக்திப் பலன்களுக்குத் தகுந்தபடி இந்த 2017 தமிழ்ப்புத்தாண்டு பலன்களும் இணைந்து பலன்களைக் கூட்டியோ, குறைத்தோ கிடைக்கப் பெறுவீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். செய்து கொண்டிருந்த வியாபாரத்தில் மாறுதலுடன், புதிய எண்ணத்துடன் பாடுபட மனதில் தெம்பு பிறக்கும். கடன்காரர்கள் தொல்லை படிப்படியாகக் குறையும். சிலருக்கு இடமாறுதல் செய்து யோகத்தைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய தொழில், வியாபாரம் செய்வோருக்கு கூடுத லான யோகப்பலன் உண்டாகும். நெருங்கிப் பழகும் பெண் ஊழியர்களிடமும் அளவோடு பழகி வருவது குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் செயலாகும். வியாபாரிகளுக்கு வியா பாரத் தில் சுறுசுறுப்பில்லாத தன்மை ஏற்படும். கடை ஊழியர்களால் அவ்வப்போது வியாபார பாதிப்புகள் உண்டாகும். குடும்பச் செலவுகள் வரவுக்கு மேல் உண் டாகும். வெளியூர், வெளிநாட்டு வியாபாரம் சம்பந்தமான வகையில் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித் தனமாகும். இதுவரை இருந்துவரும் பிரச்சினை விலகும். திடீரென என்ன நடந்து விடுமோ என்ற பயம் நீங்கி மன தைரியம் உண்டாகும். பெரிய அளவில் வர இருந்த நஷ்டம், கடன், ஆபத்து, கோர்ட் வழக்குகள், மரண கண்டம் விலகி நிம்மதி ஏற்படும். பரிகாரம்: 27 வாரங்கள் காளியம்மன் அல்லது பத்ரகாளிக்கு தொடர்ந்து 48 எலுமிச்சைப் பழமாலை அணிவித்து வாருங்கள். கடன் தொல்லை, நோய்த் தொல்லை, குடும்பத்தில் உள்ள தொல்லைகள் அகன்றுவிடும். உங்கள் ஜாதகத்தில் ராசிக்கோ, லக்னத்திற்கோ 1, 4, 5, 7, 9, 10ஆம் இடங்களிலோ சனீஸ் வரர் ஆட்சியோ உச்சமோ பெற்று நின்றால் பல நிறுவனங்களை நடத்தும். முதலாளியாகவோ, தலைமை அதிகாரியாகவோ உங்களுக்குக் கீழ் பலர் வேலை செய்பவர்களாகவோ ஊரில் பிரபலமான மனிதர்களில் ஒருவராகவும் எதிரிகளை எளிதாக வீழ்த்துபவராகவும் இருப்பீர்கள்.

பின்செல்

இந்து

img
இன்று அனுமன் ஜெயந்தி: விரதம் இருப்பது எப்படி?

ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

மேலும்
img
மிதுனம் (சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017)

பிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ

மேலும்
img
சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017

குழந்தை உள்ளம் படைத்த ராசியில் பிறந்தவரே!

மேலும்
img
கைலாசநாதர் திருவருளால் புத்ர பாக்கியம் பெற்றோம்!

பக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.

மேலும்
img
பாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா?...

ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img