செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த ஐவருக்கு 20 வருட சிறை
புதன் 05 ஏப்ரல் 2017 15:56:15

img

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரின் மேன்முறையீட்டு மனுவினை நெதர் லாந்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன், மேன்முறையீடு செய்த நான்கு பேர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் 20 வருடங்கள் சிறைத் தண் டனை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நெதர்லாந்தில் சட்டவிரோதமான முறையில் நிதி சேகரித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். சட்டவிரோதமாக அதிஷ்ட இலாபச் சீட்டுக்களை விநியோகித் தமை, பலருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, விடுதலைப் புலிகளுக்காக சேகரித்த நிதியினை இலங்கைக்கு அனுப்பியதாகவும் இவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவர்கள் இழைத்ததாக கூறப்பட்ட குற்றத்திற்காக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தேகநபர்களுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்த ஐந்து பேரில் நால்வர் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு மனு ஒன் றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனுவை நேற்றைய தினம் தள்ளுபடி செய்த நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img