img
img

மனஅழுத்தம் குறைக்குமாம் 2 நிமிட அழுகை. எப்படி?
சனி 01 ஏப்ரல் 2017 15:36:18

img

அழுகைகூட அழகுதான், அழுவது நீயாக இருந்தால்..., அழுகை என்பது கடவுள் மனிதனுக்கு அளித்த முதல் பரிசு மட்டுமல்ல வரமும் கூட...'- இவை வெறும் கவிதை வரிகள் மட்டுமல்ல, யதார்த்தமும்கூட. குழந்தை பிறந்ததும் உலகுக்குச் சொல்லும் முதல் வார்த்தையின் மொழி அழுகை. பிறந்தவர் இறந்ததும் உறவினர்களின் இரங்கலும் அழுகையாகத்தான் இருக்கும். ஆக, பிறப்பில் தொடங்கி இறப்புவரை முதலும் முடிவுமாக அமைவது அழுகை. உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும் அழுகை, பெரும்பாலும் ஆண்களைவிடப் பெண்கள் மத்தியில்தான் உடனடியாக வெளிப்படுகிறது. பெண்கள் தம் கஷ்டத்தை அழுகையின்மூலமே உலகுக்குச் சொல்கின்றனர். அப்படி வெளிப்படும் அழுகையாலும் ஆதாயம் உண்டு என்பது நல்லது தானே. அதன் பலன்கள் இதோ. *நஞ்சை நீக்கும் சக்தி பெற்றது. மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் கொஞ்ச கொஞ்சமாக வெளியேறும். நம் உடலில் மனஅழுத்தத்துக்கு எனக் கார் டிசால் (Cortisol) என்ற ஹார்மோனை தூண்டும். இந்த ஹார்மோனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவுவது கண்ணீர்தான். மேலும், மனஅழுத்தத்தில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கக்கூடியது கண்ணீர். சோகத்தை மறக்க அழுவது என்பார்களே அது இதுதான். *சிறுநீர், மூச்சு வெளியிடுதல், வியர்வை போன்றவை உடலில் உள்ள தேவையற்றப் பொருட்களை வெளியேற்றுவதற்கான வழிகள். அப்படிப்பட்ட செய லைத் தூண்டும் சுரப்பிகளைச் சமன் செய்யும் வேலையை இந்தக் கண்ணீர் செய்துவிடும். *நம் உடலில் உள்ள அதிகப்படியான மாங்கனீஸ் கண்ணீர் மூலம் வெளியேறிவிடும். ரத்தத்தில் உள்ள மாங்கனீஸ் அளவைவிட கண்ணீரில்தான் 30 சதவிகிதம் அதிகம் உள்ளது. அதன் அளவு சமன்பட கண்ணீர் உதவும். *கண்ணில் உள்ள தூசிகள், மெழுகு போன்ற வேண்டாத பொருட்களை கண்ணீர் நீக்கிவிடும். சாலையில் செல்லும்போது, நம் கண்ணில் மண் பட்டால் உடனே கண்ணீர் வரும். அதன் காரணம் இதுதான். இது சில நொடிகளில் நிகழ்ந்துவிடுகிறது. * நம் கண்ணீரே நம் கண்ணுக்கான கிருமி நாசினி மருந்து என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. கண்ணில் வளரும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளின் 95 சதவிகித வளர்ச்சியை 5 முதல் 10 நிமிடங்களில் கட்டுப்படுத்திவிடும். *இயந்திரங்களில் உராய்வுகளைக் குறைக்க மசகு எண்ணெய் பயன்படுத்தப்படும். அதேபோல் கண்ணுக்கும் இமைக்கும் உள்ள உராய்வைக் குறைக்க கண்ணீர் உதவும். இதனால் வறண்ட கண், அதனால் ஏற்படும் கண் எரிச்சல், பார்வை தெளிவின்மை போன்றவை நீங்கும். *அழுகை என்பது ஒருவிதத்தில் ஆன்டி-டிப்ரசன்டாக (Anti-depressant) செயல்படுவதை நாமே உணர்ந்திருப்போம். ஒரு மனக்கஷ்டத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்திவிட்டால் ஒரு மலையையே இறக்கி வைத்ததுபோல உணர்வோம். அப்படி அழுவது சூழ்நிலையை மாற்றாவிட்டாலும் இறுக்கமான சூழலில் நாம் உழல்வதில் இருந்து விடுதலை தரும். *துன்பத்தை மனதில்போட்டு அடைக்காமல் வெளியே சொல்லி அழுவதே நம்மை மனஅழுத்தம்,தலைவலி போன்ற இடர்களில் இருந்து பாதுகாக்கும். அது நம்மைப் பலவீனமானவர்கள் என்று காட்டாது. அது நம் மனம் புதைந்து போகாமல் தூக்கி நிறுத்திவிடும். *வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும் என்பார்கள். அதைவிட முகபாவனைகள் பலவற்றை உணர்த்திவிடும். அழுகை நம் மன ஆழத்தில் உள்ள கஷ்டத்தை மற்றவருக்கு வெளிப்படுத்தி மனிதர்களில் உள்ள புரிந்துணர்வு மேம்படுத்தும் மருந்தாக அமையும். அழுபவன் எல்லாம் கோழையல்ல... அழுகையில் இத்தனை நன்மை இருக்க தினம் ஒரு நிமிடம்கூட கண்ணீர் சிந்தலாம். மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து, ஆனந்த கண்ணீர் வடிக்கலாம். மனஅழுத்தம் தரும் விஷயங்களுக்காக கண்ணீர் சிந்தி, இதன் தாக்கத்தை குறைக்கலாம். அது நம் கண்ணின் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது!

பின்செல்

ஆரோக்கியம்

img
டிக் டாக்- ஒரு மாதிரியான மனநோய்... - டாக்டர் ஷாலினி

Tik Tok மியூசிக்கலி போன்றவற்றால்

மேலும்
img
குழந்தைகளை நிமிடத்தில் மரணிக்கச் செய்யும் செடி இருக்கிறதா?

ஒரு பெரியவரை 15 நிமிடத்தில் கொன்றுவிடும்.

மேலும்
img
ஆண்மைக்கு ஆப்பு சோப்பு?

டூத் பேஸ்ட்டுகளில்கூட இப்போது டிரைக்ளோஸனை சேர்க்கிறார்கள்.

மேலும்
img
மனஅழுத்தம் குறைக்குமாம் 2 நிமிட அழுகை. எப்படி?

அழுகைகூட அழகுதான், அழுவது நீயாக இருந்தால்...,

மேலும்
img
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்!

மிளகை மிகச் சிறந்த இரைப்பை குடலியல் சிறப்பு மருத்துவர்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img